இன்று ஸெப்டம்பர் 10.
நடுக்காவேரி ஸ்ரீநிவாஸ சாஸ்திரியாரின் நினைவு நாள்.
இது ஸ்ரீஶங்கர பகவத்பாதாசார்யர்கள் அவதரித்த காலடி க்ஷேத்ரத்தின் இருப்பிடம் பற்றிக் கண்டறிந்து அங்கு பலருடன் சென்று, 1897-98ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அங்கு வைஶாக ஶுக்ல பஞ்சமி தினத்தில் ஸ்ரீஶங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தை அதிவிமர்ஶையாக ஸ்ரீகாலடீ பகவத்பாத கைங்கர்ய தர்ம ஸபாவின் அக்ராஸனராக இருந்து நடத்தி வந்து, பிறகு உடல் நலம் குன்றி 10.09.1911 அன்று மறைந்த நடுக்காவேரி ஸ்ரீநிவாஸ ஶாஸ்த்ரிகள் ஜகத்குரு ஸ்ரீஶங்கர பகவத்பாதர்களின் மரபில் வந்த அனைத்து ஸ்ரீமடங்களுக்கும் எழுதிக் கொண்ட விஜ்ஞாபனம் ஆகும்.
தொடக்கத்தில் உண்மையான காலடி ஸ்தலத்தைக் காணவேண்டி நடுக்காவேரியார் பட்ட பாடு, அதைப் பற்றி தவசீலர்களான மடாதிபதிகள் பலரும், பொதுமக்களும் அறிய வேண்டி அவர் முதலில் எடுத்த முயற்சிகள், அவற்றினால் காலடி ஸ்தலம் மிகுந்த ப்ரஸித்தியுற்றமை,
இது தவிர,
காலடியில் 1897ஆம் வருஷம் முதல் அவர் ஸ்ரீஶங்கர ஜயந்தி உத்ஸவம் கொண்டாடத் தொடங்கியது பற்றியும் அறிய வேண்டும் ஆய்வாளர்கள் காலடி பற்றி 1897-1911 ஆண்டுகளில் அனேக பத்திரிகைகளில் நடுக்காவேரியார் தொண்டு பற்றி வெளிவந்த பல்வேறு செய்திகளையும் வாசித்துத் தெளிவுபட அறிந்து கொள்ளலாம்.
இதோ நடுக்காவேரி சாஸ்திரியாரின் வடமொழிக் கடிதத்தின் தமிழாக்கம்….
உ
ஶுபமஸ்து
ஸ்ரீமத் பகவத்பாதர்களான ஶங்கர குருராஜர் விளங்குகிறார்கள்.
ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி உசிதமான அநேக ப்ருதுக்களுடன் கூடியவர்களாயும் ஸ்ரீமான் ஸ்ரீஶங்கர குருயோகி ஸ்ரேஷ்டர்களது ஸம்ப்ரதாயத்தை பரிபாலிப்பவர்களாயும், மஹாபரிஶுத்தர்களாயுமுள்ள மடாதிபர்களின் பொருட்டு நடுக்காவேரி என்னும் க்ராமத்தில் வஸிப்பவராயும், ஸம்ஸ்க்ருதம், தமிழ், தெலுங்கு முதலிய “ப்ரஹ்மவித்யா” பத்ரிகைகளுக்கு அதிபராயும். ஸ்ரீ காலடீ பகவத்பாத கைங்கர்ய தர்ம ஸபையினது அக்ராஸனாதிபதியுமான ஸ்ரீநிவாஸ ஶாஸ்த்ரீ அநேக நமஸ்காரத்துடன் தெரியப்படுத்துவதாவது :
கேரள தேஶமென்னும் மலையாள தேஶத்தில் ஸ்ரீமத் அத்வைத வித்யையினது பரமாசாரியர்களாயும் சந்த்ரசூடரான ஸ்ரீபரமஶிவனது கலாவதார பூதர்களாயும், ஸமஸ்தமான பாஷண்டர்கள் மதத்தைத் தொலைக்கிறதும், மிக்க கெம்பீரமுமான வாக்விலாஸத்தோடு கூடியவர்களாயும், ஆசார்யர்களுக்கு ஆசார்யர்களாயும், ஆத்மாராமர்களது குலபதிகளாயும், ஸ்வரூப ஸாக்ஷாத்காரம் செய்பவர்களது புண்ணிய பலத்திற் கிருப்பிடங்களாயும், தன்னை ஆஶ்ரியித்த பக்தர்களது ஸம்சாரத்தை வேருடன் களைபவர்களாயும் நமது ஸித்தாந்தங்களுக்கு முதல் ஆசாரியர்களாயும் உங்களது பரிஸுத்தமான பெரியதோர் ஸம்ப்ரதாயங்களை நிலை நாட்டியவர்களாயும், ஸ்ரீமத் ஶங்கரர் என்ற நாமத்தால் இப் பூவுலகைப் பரிசுத்தம் செய்பவர்களாயும் ஜகத்குருவுமான இம் மஹான்களது அவதாரத்தால் பூஜிக்கக்தக்தாயும், ஸ்ரீ விருஷாத்ரி நாதருடைய ஸன்னிதியோடு கூடிய ஸ்ரீஶிவபுரம் (திருசூர்) என்னும் ஊருக்குச் சமீபமாயுமுள்ள “காலடீ” என்னும் மிக ஶ்ரேஷ்டமான க்ஷேத்ரமொன்று விளங்குகின்றதல்லவா?
அந்த க்ஷேத்ரத்திற்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஓர் தசையானது ஸமஸ்த வைதிக ஸஜ்ஜனர்களுக்கும் பெருத்ததோர் துக்கத்தைக் கொடுக்க கூடியதாயிருக்கிறது.
அதை நாளடைவில் விலக்குவற்காக ப்ரவர்த்தித்தவராயும், ஸ்ரீ காலடீ பகவத் கைங்கர்ய தர்ம ஸபையினது மெம்பர்களது உத்ஸாஹத்தால் உண்டான ஆதரவை அடைந்தவராயும்.அந்த ஸபையை அனுகிரஹிக்கின்ற ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸமஸ்த பிருதுகளுமடைந்த ஸ்ரீ ஸ்ரீங்கேரி ஐகத்குரு மஹாஸ்வாமிகளது தயவுக்குப் பாத்ரமான என்னால் மூன்று வருஷங்களாக ஸ்ரீ சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் அதே க்ஷேத்ரத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. அம் மஹான்களான பரமாசார்யர்களுடைய வைசாக ஶுத்த பஞ்சமியில் அவதரித்ததாய் நிச்சயமேற்படுதலால் அதையே ஆதாரமாய்க் கொண்டே யாமும் அதே திதியில் உத்ஸவத்தை நடத்தி வருகின்றனம்.
இவ்வுத்ஸவத்தி லிப்போது நடக்கும் ஏற்பாடாவது:-
அமாவாஸ்யை தினம் அந்த க்ஷேத்திரத்தில் நான்கு வர்ணத்தவர்களும் நான்கு ஆஶ்ரமத்தை நடத்தி வரும் வைதிகர்களும் கூடுகிறார்கள். அது முதல் பஞ்சமி தினம் வரை ஆறு தினங்களில் ப்ராஹ்மண போஜனம், ஸ்ரீருத்ராத்யாய பாராயணம், மஹன்யாஸ பாராயணம் இதுகளுடன் ஸ்ரீகாலடீ வித்யேஶ்வரரென்ற ஸ்ரீபரமஶிவ லிங்கத்திற்கு அபிஷேகம், பிறகு ஸ்ரீமதாசாரியர்களது கிருஹத்தில் குருபஜனம், தீர்த்த ப்ரஸாதம் அளிக்கிறது மற்றும் ப்ரஸ்தானத்ரயம் பாராயணம் செய்கின்றது முதலியன இப்போது நடந்து வருகின்றது.
இனி நடக்க வேண்டிய தென்னவெனில் – ஸ்ரீமதாசாரியர்களால் செய்யப்பட்ட நற்ஸித்தாந்தங்களை நன்கு கற்றுணர்ந்த மஹான்களான பணடிதர்களைத் தருவிக்க வேண்டும் . அவர்களை அழைத்து அத்வைத வித்யா ரஹஸ்யார்த்த விசாரம் செய்பச் சொல்கிறது. ஸ்ரீமத் பகவத்பாத திவ்ய மூர்த்தியினது மஹோத்ஸவம் நடத்துவது, ஶ்வேதாஶ்வதரம், நரஸிம்ஹதாபநீயம் முதலிய உபநிஷதபாராயணம், ஶங்கர விஜய பாராயணம், ஸூதஸம்ஹிதை புராணம், பகவத்கீதா பாராய ணம் ஆகிய இவைகளை ஏற்படுத்த வேண்டும். மற்றும் பிரதி தினமும் பண்டிதர்களால் காலத்துக்குத் தக்கபடி உபந்யாஸங்களும் எமது மதத்தை மேன்மைக்கு முன்போற் கொண்டு வரவேண்டிய ஏற்பாடுகளைப் பற்றிய ஆலோசனையும் மற்றும் பரிஶுத்தர்களான தங்களுடையவும், சபையினது மெம்பருடையவும் ஆஜ்ஞைப்படி, இச்சித்ததை நடத்துகிறது.
அநேக த்ரவ்யங்களாலும், ஶரீர ஶ்ரமத்தாலும் முடிக்கக் கூடிய பெரியதான ஸ்ரீமதாசாரியர்களுடைய சரணபக்தி விஷயமான கார்யத்தில் பரிஶுத்தர்களான தாங்கள் தங்கள் மேலான காரியங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதற்காக அனுக்கிரஹிக்க வேண்டியதாவது:-
ப்ரதி வருஷத்திலும் ஸ்ரீமடத்தின் ப்ரதிநிதியில் ஒருவர் அல்லது சிலபேர்கள் உத்ஸவத்திற்கு வரவேண்டும். அதில் நடக்கும் விஶேஷமான சிலவை அந்தந்த ஸ்ரீமடத்தார்கள் ஒவ்வொரு தினத்திற்காவது, ஒரு பகலுக்காவது, இராத்திரிக்காவது உசிதம் போல தனதாய் ஏற்றுக்கொண்டு நடத்த வேண்டும்.
கடைசியில் மொத்தமாய் நடந்திருக்கும் சிலவை ஸமுதாயமாய் ஸ்ரீமடத்தார்கள் பொதுவில் ஏற்றுக்கொண்டு முடிக்க வேண்டும்.
பண்டிதர்களுக்கும், ஜப ப்ராஹ்மணர்களுக்கும் ஸன்மான மளிக்க வேண்டும். இந்தக் காலடீ பகவத்பாத கைங்கர்ய தர்மஸபையை பரிஶுத்தர்கள் அனுக்கிரஹித்து வ்ருத்தி செய்ய வேண்டும்.
இவ்விதம் ஶிஷ்யர்களும், ஸ்ரீமடத்தின் காரியதர்ஶிகளும் சேர்ந்த பிறகு ஆலய ப்ரதிஷ்டா விஷயத்தில் ஆலோசளை செய்யவேண்டும்.
இதனது விவரம் அதிகமறிய வேண்டுமானால் அனுக்ரஹ ஸ்ரீமுகமொன்று எனக்காவது அல்லது அச் சபையினது கார்யதர்ஶிக்காவது அடியிற்கண்ட விலாஸப்படி அனுப்ப வேண்டியது.
அவ்வுத்ஸவ ஸமயத்திற்கு ஸ்ரீமடத்து மனிதர்களை அனுப்ப ஸௌகர்யப் படாவிடில் அவ்விடத்திய அனுக்ரஹ பூர்வமாய் அனுப்பப் படுகிற த்ரவ்யத்தை அடியிற்கணட விலாஸப்படி ஶபையினது காரியதரிசிக்கு அனுப்பி எங்களை அனுக்ரஹிக்க வேண்டும் .
வருடந்தோறும் தங்களுடைய ஸன்னிதிக்கு மஹோஸத்வானுக்ரமணி அனுப்பி வருகின்றோம். அப்படியே ஸ்ரீஆசாரியாளது சரணபக்தி வ்ருத்தியுடன் எங்களையும் அனுக்ரஹிக்க வேணடுமென தங்களுடைய ஸன்னிதியின் சரண கமலத்தில் ஸாஷ்டாங்க நமஸ்காரத்துடன் விநயமாய்த் தெரிந்துக் கொள்கின்றோம்.
கு. ஸ்ரீநிவாஸ ஶாஸ்திரிகள்,
ஸ்ரீகாலடீ பகவத்பாத கைங்கர்ய தர்மஸபா அக்ராஸனாதிபதிகள் & ப்ரஹ்மவித்யா பத்ராதிபர், நடுக்காவேரி. தஞ்சாவூர் ஜில்லா.
தர்மராஜ ஐயர்
ஸ்ரீகாலடீ பகவத்பாத கைங்கர்ய தர்ம ஸபா
பரூர். (via Shoranur – Ms. Railway)

