Home

  • Seeking Answers from Mathamnaya Adherents

    “Should the authenticity of Mathamnaya, rejected by the court as not a work of Shri Shankaracharya, be accepted without reservation, considering their recent origin, variations, unclear manuscript histories, and lack of critical editing before publishing?”

  • ஸ்ரீசங்கராசார்யர் ஸ்தாபித்த ஐந்து மடங்கள் – துங்கா ச்ருங்கேரி குருவம்ச காவ்யத்தில் குறிப்பிடப்பட்ட வரலாற்றுச் செய்திகள் பற்றிய ஆய்வு (2)

    குருவம்ச காவ்யத்தில் காணப்படும் முன்குறிப்பிட்ட ஐந்து மடங்கள் ஸ்தாபனம் பற்றிய செய்யுளின் உண்மையான பொருள் யாது? என்பதை ஈண்டு காண்போம்.

    ஸ்ரீமத்பாகவத புராணத்தில், பத்தாவது ஸ்கந்தம், மூன்றாம் அத்தியாயம், 10, 11-ஆம் சுலோகங்களை உதாரணமாகக் கொண்டு, துங்கா ச்ருங்கேரி மடத்தார் இயற்றிய குருவம்ச காவ்யத்தில் காணப்படும் மேற்சொன்ன செய்யுளுக்குப் பொருள் காணலாம் என்பது அறிஞர்கள் கருதுவர்.

    கம்ஸனின் சிறைச் சாலையில் வஸுதேவரும் அவரது மனைவி தேவகியும் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, தேவகி ஸ்ரீகிருஷ்ணனைப் பெற்றனள் என்பதையும், ஸ்ரீகிருஷ்ணனின் ஜனனத்தை மனத்திற்கொண்டு, வஸுதேவர் ஆயிரக்கணக்கான பசுக்களை ஸந்தோஷத்துடன் அந்தணர்களுக்குத் தானம் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    நள்ளிரவில் சிறையில் குழந்தை பிறந்தபோது, காவலில் வைக்கப்பட்டிருந்த வஸுதேவர் எப்படி பல பசுக்களை தானம் செய்திருக்கக் கூடும்? என்ற கேள்வி நமக்குள் எழும்.

    இதைச் சிந்தித்துப் பார்த்து, ஸ்ரீமத்பாகவத புராணத்திற்கு உரை செய்துள்ள, ஸ்ரீதர ஸ்வாமி முதலிய ஏழு உரையாசிரியர்களும் ஒரு முகமாக “வஸுதேவர் மகன் பிறந்த ஸமயத்தில், அந்தணர்களுக்கு, பின்னர் சௌகரியமான காலத்தில், ஆயிரக்கணக்கில் பசுக்களைத் தானம் செய்யவேண்டுமென மனதில் ஸங்கல்பம் செய்துகொண்டார்”, என மேற்சொல்லப்பட்ட இரு பாகவதச் செய்யுள்களுக்குப் பொருள் கூறியுள்ளனர் என்பதும் நோக்கற்பாலது.

    இந்த முறையிலேயே, துங்கா ச்ருங்ககிரி மடத்தின் குருவம்ச காவ்யத்தின் செய்யுளுக்கும் பொருள் காண்பது பொருத்தமாக இருக்கும் என்பதே அறிஞர்களின் துணிபு ஆகும்.

    பாரத நாட்டின் மாபுண்ணியப் பதியான ஸ்ரீகாசி க்ஷேத்திரத்தை அடைந்த ஸ்ரீசங்கராச்சார்யர், பாரதநாட்டின் நலம் கருதி, நாடு முழுவதிலும் நம் வேத தர்மமும், அத்வைத வேதாந்தமும் பிற்காலத்தில் தழைத்தோங்க வேண்டியதன் பொருட்டுத் தமக்கென ஒரு மடமும், தமது நான்கு சீடர்களுக்கு நான்குமாக, ஆக மொத்தம் ஐந்து மடங்களை நிறுவ வேண்டும் என ஸ்ரீகாசிப்பதியில் தங்கியிருந்தகாலை தமது மனதில் ஸங்கல்பம் செய்து கொண்டனர் என்பதே இச்செய்யுளின் உட்பொருளாகும்.

    (ஸ்ரீ.அ.குப்புஸ்வாமி ஐயரவர்கள் உபகரித்த சிறுகையேட்டை அடிப்படையாகக் கொண்டு இத் தொகுப்பு எழுதப்பட்டது.)

  • FAQ – Madhaviya Shankara Vijayam Borrowals

    Q: What are the various well-known works from which the author of Madhaviya Shankara Vijayam has borrowed verses from?

    A: • Anandagiriya Shankara Vijayam

    • Vyasachaliya Shankara Vijayam

    • Shankarabhyudayam (Tirumala Dikshita)

    • Shankarabhyudayam (Rajachudamani

    Dikshita)

    • Patanjali Charitam

  • ஸ்ரீசங்கராசார்யர் ஸ்தாபித்த ஐந்து மடங்கள் – துங்கா ச்ருங்கேரி குருவம்ச காவ்யத்தில் குறிப்பிடப்பட்ட வரலாற்றுச் செய்திகள் பற்றிய ஆய்வு (1)

    ஸ்ரீசங்கராசார்யர் ஸ்தாபித்த ஐந்து மடங்கள் – துங்கா ச்ருங்கேரி குருவம்ச காவ்யத்தில் குறிப்பிடப்பட்ட வரலாற்றுச் செய்திகள் பற்றிய ஆய்வு (1)

    துங்கா ச்ருங்கேரி மடத்தின் குருவம்ச காவ்யம் வேறெந்த சங்கர விஜய நூல்களிலும் காணப்படாததும், ஸ்ரீஆசார்யர்களின் காசி வாசத்தின்போது நடந்த நிகழ்ச்சியும் ஆகிய ஒன்றினை விசேஷமாகக் குறிப்பிடுகின்றது.

    இக்காப்பியம் ஸ்ரீசச்சிதானந்த பாரதீ (பொ.யு.1706-1741 ) என்ற முன்னாள் ச்ருங்கேரி மடாதிபரின் விருப்பப்படி, இம்மடத்தின் ஆஸ்தான பண்டிதரான காசி லக்ஷ்மண சாஸ்திரி என்பாரால் சுமார் கி. பி. 1735-இல் இயற்றப்பட்டது ஆகும்.

    இதில் மூன்றாம் ஸர்க்கத்தின் 23-வது செய்யுள் பின் வருமாறு:-

    ” வாராணஸீம் யோகிவரோதிகம்ய

    புஜைரிவ ஸ்ரீஹரி ரேஷசிஷ்யை : ।

    ஸஹாத்மனா பஞ்ச மடான யீஷாம்

    ப்ரகல்ப்ய தஸ்த்தெள கதிசித் திநானி ।।”

    இந்நூலின் முதற் பதிப்பில், ஆசிரியரே இயற்றியுள்ள உரையில், “ஸ்ரீஆசார்யர் காசியை அடைந்த பின்,ஸ்ரீபத்மபாதர் முதலிய நான்கு சிஷ்யர்களுக்காக நான்கு மடங்களையும், தனக்கென ஒன்றும், ஆக ஐந்து மடங்களை ஏற்படுத்திச் சில தினங்கள் அங்கு இருந்தனர்” என்பதாக மேற்கண்ட செய்யுளுக்குப் பொருள் சொல்லப்பட்டுள்ளது.

    பின்னர் உள்ள செய்யுள்களில், ஸ்ரீசங்கர பகவத்பாதர் தமது சீடர்களுடன் தொடர்ந்து யாத்திரை செய்த விவரங்கள் காணப்படுகின்றன.

    இந்த வரலாற்றை நோக்குங்கால் –

    * தாம் சில தினங்கள் தங்கியிருக்க வேண்டி ஐந்து மடங்களை காசியில் ஸ்ரீஆசார்யர் நிறுவ வேண்டியதன் அவசியம் யாது ?

    * அத்தினங்களில் சிஷ்யர்கள் தமது குருவிடமிருந்து பிரிந்து இருந்தார்களா?

    – என்பன போன்ற வினாக்கள் நம் மனத்தில் எழுகின்றன.

    (ஸ்ரீ.அ.குப்புஸ்வாமி ஐயரவர்கள் உபகரித்த சிறுகையேட்டை அடிப்படையாகக் கொண்டு இத் தொகுப்பு எழுதப்பட்டது.)

  • ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் விச்வரூப யாத்திரை தினச் சிந்தனை

    ஸ்ரீசங்கராசார்யர் நான்கு திருக்கரங்களை உடைய ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் போல தமது நான்கு சிஷ்யர்களுடன் திகழ்ந்து தமக்கும், தமது சிஷ்யர்கள் நால்வருக்குமாக ஐந்து திருமடங்களை அமைத்தனர் என்று துங்கா ச்ருங்கேரி குருவம்ச காவ்யத்தில் உள்ளமை கீழ்க்கண்டவாறு :-

    वाराणसीं योगिवरोऽधिगम्य भुजैरिव श्रीहरिरेष शिष्यैः ।

    सहात्मना पञ्चमठानमीषां प्रकल्प्य तस्थौ कतिचिद्दिनानि ॥२३॥

    – गुरुवंशकाव्ये तृतीयः सर्गः

    வாராணஸீம் யோகிவரோதிகம்ய

    புஜைரிவ ஸ்ரீஹரி ரேஷசிஷ்யை : ।

    ஸஹாத்மனா பஞ்ச மடான மீஷாம் ப்ரகல்ப்ய தஸ்த்தெள கதிசித் திநானி।।

    – குருவம்சகாவ்யம், 3ஆம் ஸர்க்கம், 23.

  • கேள்வி: ஸ்ரீசாரதா பீடம் எங்குள்ளது? ஸ்ரீசங்கராசார்யரின் ஸ்ரீசாரதாபீடவாஸம் பற்றி மாதவீய சங்கரவிஜயம் 16ஆவது அத்யாயத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

    பதில்: ஸ்ரீசங்கராசார்யரின் ஸர்வக்ஞ பீடாரோஹணத்தைத்தான் ‘சாரதாபீடவாஸம்’ என்று மாதவீய சங்கரவிஜயம் கூறுகிறது.

    இந்த நூலின் முதல் ஸர்க்கத்தில் ‘षोडशे शारदापीठवाससः’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16-ஆம் ஸர்க்கத்தில் ஸ்ரீஆசார்யருடைய சாரதா பீடவாஸம் கூறப்பட்டுள்ளதாக முன்னதாகவே முதல் ஸர்க்கத்தில் சொல்லப்படுகிறது. பிறகு, 16ஆவது ஸர்க்கத்தில் ஸ்ரீஆசார்யர்களின் ஸர்வக்ஞ பீடாரோஹணத்தைக் கூறிவிட்டு, ‘जयति यतिपते: शारदापीठवासः’ (16-18) என்று ஸர்வக்ஞ பீடத்தையே, ‘சாரதா பீடம்’ என்று இந்த நூலின் ஆசிரியரான நவகாளிதாஸ மாதவர் தெளிவுறக் கூறுவதால், துங்கா ச்ருங்கேரியில் சாரதா பீடம் என்ற ஒன்று இருப்பதாக மாதவீய க்ரந்தம் மூலம் வெளியாகவில்லை எனலாம். இதற்கு மாதவீயம் அல்லாத வேறு பழைய நூல்களில்தான் ப்ரமாணம் தேட வேண்டும் என்கிறபோது, பிற்காலத்தில் நவீனர் உருவாக்கிய புதிய மாதவீயத்தைச் சிலர் தூக்கிப் பிடிக்க முனைவதும் நகைப்பிற்குரியதே.

  • FAQ: Sharada in Kudali Sringeri and Virupaksha Mathas

    கேள்வி: கர்நாடக மாநிலம் துங்கபத்ரா (கூடலி) ச்ருங்கேரியில் மட்டும் நின்ற நிலையிலும், விரூபாக்ஷ ச்ருங்கேரி மற்றும் துங்கா ச்ருங்கேரியில் அமர்ந்தவாறும் இரண்டு விதமான திருக்கோலங்களில் ஸ்ரீசாரதாம்பாள் விக்ரஹம் ப்ரதிஷ்டிக்கப்பட்டுள்ளது ஏன்? இந்த வேறுபாட்டின் வரலாற்றுப் பின்னணி என்ன?

  • FAQ: Number of Mathas established by Bhagavatpada

    वाराणसीमिति । योगिवर आचार्यः वाराणसीं काशीं वरणासोनद्योर्मध्ये स्थितत्वात् वाराणसी इति पृषोदरादित्वान्निपातितः । श्रीहरिश्रतुर्भुजैरिव शिष्यैः पद्मपादाचार्यादिभिः सह अधिगम्य प्राप्य आत्मना सह अमीषां शिष्याणां पञ्च मठान्प्रकल्प्य कतिचिद्दिनानि तस्थौ स्थितवान्। ‘कालाध्वनोरत्यन्तसंयोगे’ इति सप्तम्यर्थे द्वितीया ॥ २३ ॥

  • FAQ – Final days of Shri Shankaracharya

    Q: What does Tunga Sringeri Matha’s Guruvamsakavya say about the final days of Shri Shankaracharya?

    A: According to the Tunga Sringeri matha’s Guruvamsakavya, Towards the end of His career, Shri Shankaracharya traveled from Siddheshvara in Nepal to Dattatreya Ashrama, where He left His staff and water pot. Miraculously, His staff transformed into a tree, and His water pot became a tank. Finally He resided at the Dattatreya Ashrama in Mahuripuri, (Shri Renuka Devi Temple, Mahur, Nanded District, Maharashtra – See : Images), engaging in conversations with Shri Dattatreya.

  • Source of Sloka

    The shloka that has surfaced and popularised in the recent times raises many critical questions.

    अवतीर्णश्च कालट्यां केदारेऽन्तर्हितश्च यः ।

    चतुष्पीठप्रतिष्ठाता जयताच्छङकरो गुरुः ॥

    What is the pramanam or source of this shloka? It appears to be a recent composition.

    Hence the author of this sloka should step forward to clarify on what basis it was composed and why it has been intentionally prioritized over the traditional gurumahima slokas.