ஆசார்யபாத சரணபஞ்சகம் (1931)

மண்டைக்குளத்தூர் என்னும் கிராமத்தில் 24-4-1931 முதல் இரண்டுநாள் கொண்டாடப்பட்ட ஸ்ரீமத் சங்கர ஜயந்தி மகோத்ஸவத்தில் ஸ்ரீவேத வேதாந்தப் பிரகாச மூர்த்தியாக விளங்கும் உலககுரு பரமாசார்யாளாகிய ஸ்ரீ ஆதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் மீது வே. முத்துஸாமி ஐயர். எம். ஏ., எல். டி., துதியாகப் பாடிய ஆசார்யபாத சரணபஞ்சகம் (நேரிசை வெண்பா)

1. காலடிவந் தான்ம உலகம் கடைத்தேறக்
காயிடி தந் தாண்ட கருணமுகில் – ஆலடிவாழ்
சங்கரர்தம் கூறாகத் தரணிபுகழ்
சற்குருஸ்ரீ சங்கரர் பூம் பாதம் சரண்.

2.சாரலர்தம் வாதமெலாம் தர்க்கமுறை யால்தகர்த்துப்
பாரிலக ஆறுமதம் பாலித்து – நேரிழையோர்
பங்கார் தங் கூறாகப் பார்வந்த
தெய்வகுரு சங்கரர் பூம் பாதம் சரண்.

3. இமய முதற் சேதுவரை வேதமுழக் கெங்கும்
அருமையும்வகை ஐந்துமடம் நாட்டும் –நமையாளும்
ஐங்கரர்தந் தைகூறா அம்புவி போற் றான்றகுரு
சங்கரர் பூம் பாதம் சாண்.

4. மலையுச்சித் தீபமென மாண்பார் அத்வைத
நிலை மெச்ச ஓங்கி நிலவத் – தலைமைச்சீர்
பொங்கரார்தங் கூறாப் புவியுய்யப் போந்தகுரு
சங்கரர் பூம் பாதம் சரண்.

5. விலை மதிக்க வொண்ணாத வேதாந்த உண்மை
கலை மதியார் கண்டு கதி காணத்- தலைமதியம்
தங்கார்தங் கறாச் சகத்தொளிரும் ஞானகுரு
சங்கரர் பூம் பாதம் சரண்.

இங்ஙனம்,

ஸ்ரீபரமாசார்யாள் திருவடிக்கு வழிவழித்தொண்டு

பூண்டொழுகும், தாஸன்,

வே. முத்துஸாமி ஐயன். எம். ஏ., எல். டி., பால பாடசாலைப் பரிசோதகன் போளூர்,

வட ஆற்காடு ஜில்லா.