ஸ்ரீசங்கரபகவத்பாத பூஜாவிதி
ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானம் கோசத்திலிருக்கும் ப்ராசீன க்ரந்தங்களைப் பரிசீலித்து ஸ்ரீமடம் ஆஸ்தான பண்டிதர்களின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
” இது காறும் ஆஸ்திகப் பெருமக்கள் ஸ்ரீசங்கர ஜயந்தீ ஸமயத்தில் ஸ்ரீபகவத்பாதரைப் பூஜிப்பதற்கான நல்ல முறைப்படி உள்ள பூஜாவிதி கிடைக்காமலிருந்த குறை இப்பொழுது நீங்கியது.
இந்த பூஜாவிதி கல்பம், ப்ராசீன கிரந்தங்களிலிருந்து, சிறந்த பண்டிதர்களால் தொகுத்து பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திகர்கள் ஓவ்வொருவர் வீட்டிலும் இந்த கல்ப புஸ்தகம் இருக்க வேண்டியது மிக அவசியம். இதில் கூறப்பட்டுள்ள முறைப்படி ஸ்ரீசங்கர பகவத்பாதரைப் பூஜித்து குருவின் கருணைக்கு பாத்திரர்களாகி, ஸகல ச்ரேயஸ்ஸையும் அடைய வேண்டுமாகக் கோருகிறேன்”.
– சாஸ்த்ர ரத்னாகர போலகம்,
ஸ்ரீராம சாஸ்திரிகள்