ஸ்ரீசங்கர விஜயம்- 10

ஸ்ரீசங்கர விஜயம்

மண்டனமிச்ர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

அப்படியே ஆகச் சங்கரர் அமைய,

ஆரணங்கு வாதிக்க ஆயத்த மானாள்;

ஆசாரியர் சிறிதும் அறியாத் தர்மம்

கிரகஸ் தாசிரமம் என்பதைப் பற்றி

விரைவில் வெகுவாய் வினவ லானாள்;

அதனைக் கேட்ட சங்கரர் தவணை

ஆறு மாதம் அளிக்கக் கேட்டார்;

சீர்மிகு மாதவள் நேர்மை யாகவே

பார்புகழ் சங்கரர்க்குத் தவணை தந்தாள்;

மத்திய தேசத்தில் மன்னன் அமருகன்

மண்ணுலகு விட்டு விண்ணுல கேகினான்.

மன்னன் தேகத்தில் தன்னாவி புகுத்துத்

தாமிது வரையில் அறியா திருந்த

தருமமே யான கிரகஸ்தா சிரமத்தை

ஏற்க நினைந்தார் எம்பெரு மானவர்;

சிறியதொரு குகையில் சீடர்க ளிடையில்

தன்னுடல் விட்டு மன் னுடல் புகுந்தார்;

மன்னன் எழுந்தான், மக்கள் மகிழ்ந்தனர்;

அன்னவ னுடன் அரண்மனை யேகினர்

பட்ட மகிஷியும் பரமகிழ் வுற்றாள்;

திட்டமுடன் நாடு செழித்தோங் கிடவே

மாதமும் மாரி மழைபொழிந் ததுவே ;

தேச மக்களும் க்ஷேமம தெய்தியே

நேசம் மிகக்கொடு களிப்புற்று வாழ்ந்தனர்;

மகானின் வரவினால் மாறிய நிலைமையை

மன்னர் மனைவி மனத்திலே யுணர்ந்தாள் ; (10/20)

No photo description available.