பத்மபாதர் சீடரானமை பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
ஆதி சங்கரரிடம் அதிபக்தி கொண்டவர்
வேதியர் ஸநந்தனர் எனுமொரு சிரேஷ்டர்
அவர்தம் மகிமையை அயலார் அறிய
நிகழ்ந்ததோர் சம்பவம் நிகழ்த்துவன் கேளீர்!
நீர்ப்பிர வாகம் நிறைந்த கங்கையின்
அக்கரை நின்ற அந்தணர் ஸநந்தரை அழைத்தார் சங்கரர் தம்மிடம் வரவே ;
தயக்கம் கொள்ளா ஸநந்தன ராற்றில்
இறங்கி நடந்தார்; இறைவன் அருளால்,
தாமரை யொன்றொன் றவர்பதந் தாங்கித்
தாண்டிவரச் செய்தது தவச்சி ரேஷ்டரை ;
அவர்குரு பக்தியை அகமகிழ்ந்து போற்றிப்
பத்மபா தர்எனப் பட்டம் சூட்டி
உத்தமச் சீடனாய் ஏற்றார் சங்கரர். (8/20)
Month: April 2024
ஸ்ரீசங்கர விஜயம் – 7
மநீஷா பஞ்சகம் இயற்றியது பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி., (ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
கங்கா நதியின் கரைபுரள் நீரில்
சங்கரப் பெரியோன் சதுர்பெற ஆடித்
தனிப்பெரு வீதியில் தாம்வரும் போது
நனிப்பெரு நாய்கள் நான்கி னுடனே
சண்டாள னொருவன் வழியில் நின்றான்;
கண்டா ரவனை ; கனவழி நீங்க
விண்டார் விமலர் சங்கர பாதர்;
வெருண்ட வவனும் வெகுண்டு நோக்கி,
“தெருண்ட நும்முப தேசம் நன்றுநன்று!
எல்லாம் இறைவ னென்றே அறைவீர்!
சொல்லா மதுவு மென்பா லன்றோ!
நானு மிறைவனே போவதேன் தூரம்!
ஏனு மெனக் கென்ன வுரைப்பீர்!” என்றே வினவ,
இறைவர் ஆய்ந்து, ஐந்து சுலோக மழகுட னமைத்து
மைந்தர் வாழ மநீஷா பஞ்சகம்
என்றப் பெருநூ லவனுக் கருளி,
”ஆன்ம ஞானி யெவனுமென் னாசான் ;
யான்வ ணங்கு மடிகளு மவனே” என்று கூற, ஏதிலன் மறைந்தான் ;
நன்றே காசி நாதன் தோன்றினன்.(7/20)
ஸ்ரீசங்கர விஜயம் – 6
ஸ்ரீசங்கர விஜயம் பாஷ்யம் இயற்றியது பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி., (ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
காசியம் பதியில் கருதுறும் அத்வைதம்
மாசற விளக்கி மாண்புற நிறுவிப்
பிரம்ம சூத்திரப் பெருமறை தனக்குப்
பரும வுரையாம் பாஷிய மியற்ற
அன்புடன் பணித்தா ரருமைக் குருபரர்;
அம்மொழிப் படியே தாமங் கியற்றிச்
சங்கர பரம பகவத் பாதர் மங்கலம் விளங்கும் மாண்புடைக் காசியில்
தங்கி யிருந்த தகைமிகு நாளில், (6/20)
ஸ்ரீசங்கர விஜயம் – 5
குருதரிசனம்
பேராசிரியர்
ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
நர்மதை நதிக்கரையில் மலைக்குகை யொன்றில்
நற்றவ மிருந்தார் ஸ்ரீகோவிந்த பாதர்
நாடினா ரவரை நலமிகு சங்கரர் ;
நற்குரு வாகவே ஏற்கும்எண் ணத்துடன்
சற்குரு சமீபம் சங்கரர் சென்றார்;
நிஷ்டையி லிருந்தார் இஷ்ட கோவிந்தர் ; விரைவாய் நர்மதை வந்தவெள் ளத்தால் விழுங்கியே சென்றது வெகுவாய்க் கிராமங்களை ;
வெள்ளத்தை யுடனே வேகமாய்க் கடத்தில்
உள்ளடக்கி னாரவ் வுத்தமர் சங்கரர்;
அபாயம் நீங்கிய ஆனந்தக் கூத்தில் ஆரவாரித்தனர் அக்கிராம வாசிகள்
நிஷ்டை கலைந்துகண் நோக்கிய கோவிந்தர்
நிர்மல சிரேஷ்டர் நிற்கக் கண்டார்;
உணர்ந்தார் அவர்மகிமை உள்ளம் மகிழ்ந்தார்;
உவகையுட னவரை ஏற்றார் சீடனாய். (5/20)
ஸ்ரீசங்கர விஜயம் – 4
ஸ்ரீசங்கர விஜயம்
பேராசிரியர்
ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
மகனுக் கோர்மணம் செய்வித்து மகிழ மனத்திற் கொண்டாள் மாதா ஆர் யாம்பிகை;
சங்கர ரோவெனில் சந்நியாசம் ஏற்கச் சந்தர்ப்ப மொன்றைச் சடுதிகைக் கொண்டார்;
தாயும் மகனும் தனிநீ ராடுகையில்
சேயின் காலையோர் முதலை பிடித்தது;
அலறினாள் தாயும், அழுது துடித்தாள்; பதறினாள் அங்கே பயமிகக் கொண்டு ;
“சந்நியாச ஆச்ரமம் சங்கரன் ஏகற்கு
அன்னை விடைதந்தால் அகலும் சங்கடம்;
கவலைப் படாதீர் கண்ணீர் விடாதீர்; முதலையின் வாக்கிது முடிவைச் சொல்லுவீர்”
எனவே பகர்ந்தார் இளைஞர் சங்கரர் ;
“அப்பா மகனேஎன் அருமைச் செல்வமே!
இப்போ துனைநான் பிரிந்தெங்ஙன் வாழ்வேன்?
உன்னைத் தவிர உறுதி வேறுண்டோ?
தன்னந் தனியாய்த் தவிக்கவே விடாதே!”
என்று வருந்தினாள் ஏங்கியே தாயும்;
ஒன்றிய தாயின் சொற்கேட்டுச் சங்கரர்
“வருந்தாதீர், அம்மா! வேறுதுணை இலையென;
அருந்தவப் பயனும் அவலமே யாகாது; அன்னைக் குரிய அந்திக்கன் மங்களைச் சொன்ன முறைப்படி நிச்சயம் செய்வேன்;
சன்மார்க்க வழியில் சந்நியாசம் ஏற்கச்
சடுதியி லெனக்கு விடைதந் திடுவீர்”
எனவே புகல, மனமிளகித் தாயும்
புத்திரன் பிழைத்தால் போதுமென் றெண்ணி
உத்தரம் தந்தாள் உதவினள் துறவு. (4/20)
ஸ்ரீசங்கர விஜயம் – 3
ஸ்ரீசங்கர விஜயம்
பேராசிரியர்
ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
குருகுல வாசம் செய்யுமந் நாளில்
ஒருசிறு சம்பவம் நிகழ்ந்தது கேளீர்;
அந்தணர் ஒருவர் அவர்மிக ஏழை,
உஞ்ச விருத்தியில் உயிர்வாழ்ந்து வந்தார்;
பிரம சரிய முறையின் படியே
நிர்மல சங்கரர் பிக்ஷை யேற்க
அந்தணர் இல்லம் அருகில் நின்றார்;
வந்தனள் மறையோன் மனையாம் நங்கை
பவப்பிணி நீக்கும் பாலன் முகத்தைத் தவப்பெரும் பயனால் கண்டு களித்தாள்;
அவசர மாகவே அகமெங்கும்
ஓடினாள் ;
பிக்ஷைய ளிக்கப் பக்ஷணம் ஒன்றும்
தக்ஷணம் காணாது தவியாய்த் தவித்தாள்;
நெல்லிக் கனியொன்று கையிற் கிடைத்ததை
மெல்லியல் அன்புடன் இட்டனள் பிக்ஷையாய்
அய்யன் கண்டான் அவள்தன் அன்பை; மெய்யான கருணை மிகக்கொண்டான் உடனே;
அந்தணர் தம்பதியை ஆட்கொண்ட வறுமையை
அப்பொழுதே போக்கிட ஆர்வம் கொண்டான்.
மனத்திலே நினைந்தான் மகாலக்ஷ்மி யன்னையை
கணமதே சொரிந்தான் கனகதா ராஸ்தவம்
தங்கக் கனிகள் பொழிந்தன அங்கே ; பொங்கிய செல்வம் பொலிந்தது இல்லம்.(3/20)
சோழர் கல்வெட்டில் பகவத்பாதீயம் சாரீரகபாஷ்யம்
டாக்டர்.குடவாயில் பாலசுப்ரமணியன்
சோழமாதேவி ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின் ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்யம் – பகவத்பாதீயம் என்னும் சாரீரக பாஷ்யத்திற்கு ப்ரதீபகம் ஆகிற வார்த்தீகம் வக்காணிக்கப்பட்டதைக் குறிப்பிடும் பழைய சிலாசாசனம் பற்றிய ஆய்வுக்கட்டுரை இது.
இதிற் காணும் ப்ரதீபகம் என்னும் விரிநூலை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் ஆசார்யராக விளங்கிய ஸ்ரீசிதானந்தரே இயற்றினர் என்பதை நிறுவுகிறார் இக் கட்டுரையாசிரியர்.
சோழவளநாட்டில் ஸ்ரீசங்கராசார்யரின் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் மற்றும் அவர்களின் வழிவந்த ஸ்ரீகாமகோடி பீடத்தின் ஆசார்யரான ஸ்ரீசிதானந்தேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ரதீபகம் என்னும் வார்த்தீகம் ஆகியன அக்காலத்தில் வெகுவாக வழங்கி வந்துள்ளமை இதனால் உணரப்படும்.
சோழர் கல்வெட்டில் பகவத்பாதீயம் சாரீரக பாஷ்யம்
டாக்டர்.குடவாயில் பாலசுப்ரமணியன்
சோழமாதேவி ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின் ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்யம் – பகவத்பாதீயம் என்னும் சாரீரக பாஷ்யத்திற்கு ப்ரதீபகம் ஆகிற வார்த்தீகம் வக்காணிக்கப்பட்டதைக் குறிப்பிடும் பழைய சிலாசாசனம் பற்றிய ஆய்வுக்கட்டுரை இது.
இதிற் காணும் ப்ரதீபகம் என்னும் விரிநூலை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் ஆசார்யராக விளங்கிய ஸ்ரீசிதானந்தரே இயற்றினர் என்பதை நிறுவுகிறார் இக் கட்டுரையாசிரியர்.
சோழவளநாட்டில் ஸ்ரீசங்கராசார்யரின் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் மற்றும் அவர்களின் வழிவந்த ஸ்ரீகாமகோடி பீடத்தின் ஆசார்யரான ஸ்ரீசிதானந்தேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ரதீபகம் என்னும் வார்த்தீகம் ஆகியன அக்காலத்தில் வெகுவாக வழங்கி வந்துள்ளமை இதனால் உணரப்படும்.
ஸ்ரீசங்கர விஜயம் – 2
பேராசிரியர்
ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)
மூன்றாம் வயசு முழுதும் நிரம்புமுன் சான்றோன் சங்கரன் பாஷைபல பகர்ந்தான்;
ஐந்தே ஆண்டுகள் கடக்கும் முன்னமே மைந்தனும் கற்றான் சாத்திர மனைத்துமே ;
இந்த நிலையில் தந்தை சிவகுரு
மைந்தனை விட்டு மண்ணுலகு நீத்தார்;
தனித்து நின்ற தாய்ஆர் யாம்பிகை
தனயன் தனக்குத் தந்தையு மானாள் ;
உரிய காலத்தில் உறவினர் உதவியால்
உபநயனம் செய்வித் துள்ளம் மகிழ்ந்தாள் ;
வேதாப் பியாசம் விதிப்படி செய்யவும் வேண்டிய பலப்பல வசதிகள் செய்தாள்;
மாதாவே தெய்வமென மதித்தார் சங்கரர்;
வேதாக மங்கள் ஒதுவது மானார் ;
அன்னையிடம் சங்கரர்க் களவற்ற அன்பு;
அன்பினால் அவர்செய்த அற்புத மனந்தம் ;
நோய்வாய்ப் பட்ட தாயவள் நதிக்குப்
போய்வர இயலாப் பொழுதினி லங்கே
ஆற்றைத்தம் இல்லத்தின் அருகே வாவென
ஆஞ்ஞா பித்தார் அன்னைக்கு உதவ; செல்வனின் ஆணைக்குச் செவிசாய்த் தந்நதி
தெள்ளென ஓடியது வீட்டுவா சலிலே. (2/20)
ஸ்ரீசங்கர விஜயம் – 1
ஸ்ரீசங்கர விஜயம்
பேராசிரியர்
ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கரஜயந்தி வெளியீடு)
ஆதி சங்கரர் அடிபணிந் தேநான்
அறிவிற் சிறந்தோர் நிரம்பிய அவையில்
சச்சிதா னந்த ஸ்வரூபமே யான
சங்கரர் சரிதையை, அவர்தம் மகிமையை
அகவற் பாவில் அடியேன் நும்பால்
அறிவிற் சிறியேன் உரைக்கமுன் வந்தேன்;
அன்னப் புள்ளுக்கு அளிக்கும் பாலில்
தண்ணீர் கலந்து தாலத்தி லிட்டால்
உவந்து வந்தப் பாலைப் பருகிக்
கலந்து வைத்த நீரைத் தவிர்த்தலின்
குற்றம் குறைகள் நீவிர் காணில்
சற்றக் குறைகளை அறவே மறந்து
குணமதை மனத்தில் கொண்டுமே என்னை
மனமுவந் தேற்க வேண்டினேன் நும்மை.
நூல்
அவதாரம்
பாரோங்கு புகழ்கொள் பாரத நாட்டில் சீரோங்கும் கேரள தேசப் பகுதியில்
புண்ணியம் மிக்க காலடிப் பதியில்
அண்ணல் சிவகுரு அவர்தம் மனைவி
ஆர்யாம் பிகையெனும் அருங்குண மாது
பூரியர் இவர்செய் அரும்பெரும் தவத்தால்
முக்கண் முதல்வனே சங்கரர் என்று திக்கெலாம் வணங்கத் தோன்றி யருளப்
பெற்றோர் மகிழ்ந்தனர் ; பேரின்ப மெய்தினர் ;
உற்றார் உறவினர் உள்ளங் களித்தனர்;
பரம்பொருள் அம்சமே உருக்கொண்ட சங்கரர்
நிரம்பிய தேசுடன் விளங்கினா ராங்கே.(1/20)
ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி ..2..
ச்ருங்கேரி என்ற பெயரொட்டுடன் திகழும் பல்வேறு மடங்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி பற்றிய ஆய்வுக் குறிப்புகள் …2
ஸ்ரீவிரூபாக்ஷ மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை – பிருதாவளி இங்கு தரப்படுகிறது.
(அ) வட்டத்துள் வட்டமான புஷ்ப முத்ரையிலுள்ள சொற்கள்:-
“ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமீ”
“ஸ்ரீவித்யாசங்கர மஹீபால முத்ரா”
இதிற் காணும் பிருதங்களில் முக்ய சிலவற்றின் பொருள்:-
“வ்யாக்யான ஸிம்ஹாஸனாதிபரும், கர்நாடக ஸிம்ஹாஸனத்தை நிறுவிய, துங்கபத்ராதீரவாஸியான ச்ருங்ககிரி விரூபாக்ஷ ஸ்ரீ வித்யாசங்கர தேவரின் பாதத்தாமரைகளை ஆராதிப்பவருமான “