ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி

ச்ருங்கேரி என்ற பெயரொட்டுடன் திகழும் பல்வேறு மடங்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி பற்றிய ஆய்வுக் குறிப்புகள் (தொகுப்பு …1)

ஆந்திரம்-கர்நாடகம்-மஹாராஷ்ட்ரம் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் “ச்ருங்கேரி” என்ற பெயரொட்டுடன் புகழுடன் விளங்கும் மடங்கள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இந்த மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி ஆகியன அனைத்தும் ஒரேமாதிரியான பெயர் மற்றும் சொற்களுடன் இருப்பது இந்த மடங்கள் யாவும் சமமான அந்தஸ்துடன் முற்காலந்தொட்டு போற்றப்பட்டு வந்துள்ளமைக்குச் சான்று பகர்கின்றன.

இத்தொகுதியில் தரப்படும் ஸ்ரீமுக முத்ரை, பிருதாவளி மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியனவற்றால் இந்த மடங்கள் தோன்றிய காலம், மரபு, வளர்ச்சி மற்றும் இவற்றிற்கு அந்தந்த பிரதேச மன்னர்கள் அளித்துள்ள சமமான அந்தஸ்து ஆகியன எளிதின் விளங்கும்.

மேலும் ஸ்ரீமுக பிருதாவளிகளில் ஒரே வகையினவாகக் காணப்படும் இவ்வணிகள் யாவும், தமது இருப்பிடத்தின் பெயரை முன்மையாகவும், ச்ருங்கேரி என்ற இணைப்பையும் ஏற்றுவந்துள்ள எந்த ஒரு குறிப்பிட்ட மடத்துக்கும் மட்டுமே சொந்தமானவை என்று சொல்வோரின் அறியாமையை நமக்குத் தெற்றெனப் புலனாக்கும்.

இத்தொகுப்பில் முதலாவதாக ஸ்ரீபுஷ்பகிரி ச்ருங்கேரி மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை பிருதாவளி இங்கு தரப்பட்டுள்ளது.

“ஸ்ரீ வித்யா சங்கர”

(அ) சதுர வடிவிலான முத்ரையிலுள்ள சொற்கள் :-

“ஸ்ரீச்ருங்ககிரி ஸ்ரீவிரூபாக்ஷ – ஸ்ரீபுஷ்பகிரி ஸ்ரீஆலம்புரி – ஸ்ரீவித்யாசங்கர கரகமல-ஸஞ்ஜாத. “

(ஆ) ஸ்ரீமுக பிருதுகளில் சிலவற்றின் பொருள் :-

“வ்யாக்யான ஸிம்ஹாஸனத்தின் அதிபரும், கர்னாடக ஸிம்ஹாஸனத்தை நிறுவிய, துங்கபத்ராதீரவாஸியான, ச்ருங்ககிரி, விரூபாக்ஷ, புஷ்பகிரி, ஸ்ரீசைல, ஆலம்புரி முதலிய அனைத்து பீடங்களின் அதிபதியான ….”