ராமேச்வரம் மகாராஷ்டிர ஆரியர்களின் சாதித் தகுதி – துங்கா மடத்தார் நீதிமன்றத்தின் முன்பாகச் சொல்லியுள்ள சங்கதி

ராமேச்வரம் மகாராஷ்டிர ஆரியர்களின் சாதித் தகுதி பற்றி 1844ஆம் ஆண்டு திருவானைக்கா தாடங்க ப்ரதிஷ்டை வழக்கில் துங்கா மடத்தார் நீதிமன்றத்தின் முன்பாகச் சொல்லியுள்ள சங்கதி இது.

“ராமேசுவரம் ஸ்தலத்திலிருக்கும் ஆரிய ஜாதியார்களுக்கு பிராமணத்துவமில்லையென்று மேற்படி ஸ்தலம் பிராம்மணாள் விவாதப்பட்டு ஸ்ரீங்கேரி ஸ்ரீஜகத்குரு சுவாமியளவாளிடத்தில் வியாச்சியம் சொல்லிக்கொண்டதை ஸ்ரீ சுவாமியளவாள் கேட்டு சாஸ்திரப்படி ஆரியாளுக்கு பிராமணத்துவமில்லை யென்றும், அவாளிடத்தில் உகத ஸ்பரிசம் செய்யக் கூடாதென்றும், ஸ்ரீமுகமனுப்பினதற்கு மேற்படி ஆரியாள் சம்மதிப்படாமல் (வருஷம் தேதியாதி இல்லை) மதுரை ஜில்லா கோர்ட்டில் வியாச்சியம் செய்ததில் மேற்படி சுவாமியளவாள் கொடுத்த ஸ்ரீமுகத்தை தானே உறுதிப்படுத்தி…”

ராமேச்வரத்துக்கு முதன்முதலாக தரிசனத்திற்காக யாத்திரையாக வந்த துங்கா மடத்து ஆசார்யர் சாஸ்திரப்படி ராமேச்வரத்து ஆர்யர்களுக்கு பிராமணத்துவம் இல்லையாதலின் அவர்கள் தொட்ட ஜலத்தை ஏற்கக்கூடாது என்பதான உத்தரவைப் போட்டார்; அதற்காக ஒரு திருமுகமும் தனியே வெளியிட்டார் என்று அவர்கள் தரப்பில் தாக்கலான வழக்குரைப் பகுதி மூலம் நமக்குத் தெரியவருகிறது.

19ஆம் நூற்றாண்டில் ராமேச்வரத்து ஆர்யர்களை அந்தணர்களாக ஏற்கத் தடை விதித்தது சாஸ்திரம் என்றால்…

20ஆம் நூற்றாண்டில் அதே மரபினரைத் தகுதி வாய்ந்த அந்தணர்களாக மாற்றி மந்திரம் உபதேசிக்கவும், சீடர்களாகக் கொள்ளவும் எந்த சாஸ்திரம் அனுமதித்தது?

என்னும் கேள்வி எழுகிறது.

இந்த சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பாக வாசகர் தரப்பிலிருந்து எழும் கேள்விகளைப் பொறுத்து நமது குறிப்புரை தொடரும். வரலாறு தொடர்பான கருத்துகளை மட்டுமே எழுதலாம். தேவையற்ற மரபிற்கொவ்வாத விஷயங்களைத் தவிர்க்கவும். நன்றிகள் பல.