பதில்: ஸ்ரீசங்கராசார்யரின் ஸர்வக்ஞ பீடாரோஹணத்தைத்தான் ‘சாரதாபீடவாஸம்’ என்று மாதவீய சங்கரவிஜயம் கூறுகிறது.
இந்த நூலின் முதல் ஸர்க்கத்தில் ‘षोडशे शारदापीठवाससः’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 16-ஆம் ஸர்க்கத்தில் ஸ்ரீஆசார்யருடைய சாரதா பீடவாஸம் கூறப்பட்டுள்ளதாக முன்னதாகவே முதல் ஸர்க்கத்தில் சொல்லப்படுகிறது. பிறகு, 16ஆவது ஸர்க்கத்தில் ஸ்ரீஆசார்யர்களின் ஸர்வக்ஞ பீடாரோஹணத்தைக் கூறிவிட்டு, ‘जयति यतिपते: शारदापीठवासः’ (16-18) என்று ஸர்வக்ஞ பீடத்தையே, ‘சாரதா பீடம்’ என்று இந்த நூலின் ஆசிரியரான நவகாளிதாஸ மாதவர் தெளிவுறக் கூறுவதால், துங்கா ச்ருங்கேரியில் சாரதா பீடம் என்ற ஒன்று இருப்பதாக மாதவீய க்ரந்தம் மூலம் வெளியாகவில்லை எனலாம். இதற்கு மாதவீயம் அல்லாத வேறு பழைய நூல்களில்தான் ப்ரமாணம் தேட வேண்டும் என்கிறபோது, பிற்காலத்தில் நவீனர் உருவாக்கிய புதிய மாதவீயத்தைச் சிலர் தூக்கிப் பிடிக்க முனைவதும் நகைப்பிற்குரியதே.