அத்வைதமே வைதிக தர்ஶனம்”

அத்வைதமே வேதத்தில் கூறப்பட்டுள்ள ஶாஸ்த்ரம் ஆகும் என்பதற்குச் சான்றுகள் அனேகம் உள. ஸ்ரீமஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் “सांख्यं योगः पाञ्चरात्रं वेदाः पाशुपतं तथा” என்று கூறப்பட்டுள்ளமை ஈண்டு அறியற்பாலது. இங்கு ஸாங்க்யம், யோகம், பாஞ்சராத்ரம், பாஶுபதம் என்னும் நான்கினும் வேறான ஒன்றாகத் தனியே “வேதமதம்” சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வைதிக தர்ஶனம்தான் அத்வைத தர்ஶனம் என்பது அறிஞர் கொள்கை ஆகும்