ஆதிசங்கரர் துங்கபத்ரையின் கரையருகில் இருக்கும் ச்ருங்கேரியில் ஒரே ஒரு மடம் அமைத்தார். ஆனால் பிற்காலத்தில் அதனுடன் தொடர்புடைய எட்டு மடங்களும் தம்மைச் சிருங்கேரி மடங்கள் என்றே எனக் கூறிக் கொள்வதை ஆவணங்கள் காட்டும். இந்த எட்டு திருமடங்களுள் தொன்மையானது எது என்பதும் ஆய்வுக்குரியது.
1. கூடலி ச்ருங்கேரி,
2.துங்கா ச்ருங்கேரி,
3.ஆமனி ச்ருங்கேரி,
5.புஷ்பகிரி ச்ருங்கேரி,
6.சிவகங்கா ச்ருங்கேரி,
7.கரவீரம் ச்ருங்கேரி மற்றும்
8. சங்கேச்வரம் ச்ருங்கேரி
ஆகிய இவ்வெட்டு திருமடங்களுமே வரலாற்றுப் போக்கில் தம்மை ச்ருங்கேரி மடங்கள் எனக் கூறிக்கொள்கின்றன. இவற்றுள் சில காலப்போக்கில் நலிவுற்றன கூடலி, துங்கா மற்றும் புஷ்பகிரி மரபுகள் இன்றும் நிலைபெற்றுச் சமயப்பணிகள் புரிகின்றன.
எந்த மடத்திலும் அதிபதியாக இருந்திராத ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளால் இவ்வெட்டு ச்ருங்கேரி மடங்களும் தக்கவர்களை நிறுவிப் புனரமைக்கப்பட்டன.
கூடலி ச்ருங்கேரியும் அங்குள்ள மடத்தின் திருமரபும்
கூடலி ச்ருங்கேரி மடம் மிகத் தொன்மையானது. வித்யாநகரம், மஹாராஜதானி, ந்ருஸிம்ஹ க்ஷேத்ரம், தக்ஷிண வாராணஸீ, துங்கபத்ரா தீரம், ருஷ்யாச்ரமம், ருஷ்ய ச்ருங்க நகரம், ச்ருங்ககிரி ராமக்ஷேத்ரம், ராமேச்வரம் ஆகிய பெயர்கள் துங்கபத்ரா சங்கமத்தில் இருக்கும் கூடலி ச்ருங்கேரிக்கு உரியனவாகக் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் பழைய வரலாற்றுக் குறிப்புகளால் அறியப்படுகின்றன.
துங்கபத்ரா கூடலி சங்கமத் தலத்தில்
ஸ்ரீசங்கரபகவத்பாதர்களால் தமது முதன்மைச் சீடர்களுள் ஒருவரான ஸ்ரீப்ருத்வீதர பாரதிக்காக ஸ்தாபித்தருளப்பட்ட தக்ஷிணாம்னாய சாரதா பீடம் பொலிவுடன் திகழ்கின்றது