(21.4.1988 அன்று தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)ஸ்ரீசங்கராசார்யரும் காசி க்ஷேத்ரமும்
ஸ்ரீசங்கரபகவத்பாதர்கள் வாராணஸீ க்ஷேத்ரத்திற்கு விஜயம் செய்தபோது ஐந்து மடங்களை ஏற்படுத்த ஸங்கல்பம் ஏற்றனர் என்பது தொடர்பான வரலாற்றுத் தகவலுக்கு அடிப்படை ஆதாரம் துங்காச்சிருங்கேரி மடத்து அதிபர் உத்தரவின்படி 1735ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குருவம்ச காவ்யத்தில் காண்கிறது.
உண்மை இப்படியிருக்க, ஆம்னாய மடங்கள் நான்கு; ஆசார்யர்கள் நால்வர் மட்டுமே என்று குருவம்ச காவ்யம் இயற்றப்பட்டதற்குப் பிற்பாடு யாரோ அடையாளம் தெரியாத பண்டிதர் எழுதிவைத்த மடாம்னாய நூலைக் கொண்டு சாதிக்கச் சிலர் தொடர்ந்து முயன்று தோற்று வருவதும் நகைப்புக்குரியதே.