பொது விவாதம் : கோரிக்கை
துங்கா மடம் சுவாமிகளின் சார்பில் 1844ஆம் ஆண்டு திருவானைக் கோவில் ஸ்ரீஅகிலாண்டேஶ்வரீ அம்பாளுக்குத் தாடங்க ப்ரதிஷ்டை செய்யத் தமக்கு மட்டுமே உரிமை இருப்பதாகக் கூறி திருச்சிராப்பள்ளி சதர் அமீன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அசல் 95ஆம் எண் வழக்கில் கீழ்க்கண்ட இரண்டு முக்கிய வாதங்கள் ஸ்ரீசங்கர விஜயம் மற்றும் இதர தரவுகள் அடிப்படையில் அவர்களது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன.
முதலாவது :-
கலியுகம் பிறந்து 3000 வருஷத்திற்குப் பின் விக்ரமாதித்யன் ராஜரீகத்தில் ஸ்ரீசங்கரபகவத்பாதர் கேரள தேசத்தில் அவதாரம் செய்தார்.(அதாவது கலி தொடக்கம் பொ.யு.மு. 3201இதில் 3000 ஆண்டுகள் சென்றது போக பொ.யு.மு. 201ஆம் ஆண்டு).
இரண்டாவது:-
காசியில் தம்மை தரிசித்த ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமிகளுக்கு 5 லிங்கங்களை ஸ்ரீவிஶ்வநாதர் கொடுத்தார்.
துங்கா மடம் ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளும் அவருடைய சிஷ்ய ப்ரசிஷ்யர்களும் இவற்றை அக்காலத்தில் மறுக்காமல் ஏற்று வந்துள்ளனர்.ஆனால், மிகச் சமீபகாலமாக ஸ்ரீசங்கராசார்யர் அவதார காலம் பொ.யு 788; அவர் ஈசனாரிடமிருந்து 4 லிங்கங்கள் மட்டுமே பெற்றார்; அவற்றை 4 ஆம்னாய மடங்களிலும் கொடுத்தார்; இவற்றுக்கு அங்கே பூஜை நடப்பதாக முற்றிலுமாக மாற்றிப் பொது ஊடகங்களில் புதுப் பிரச்சாரம் செய்வது ஏன்? ஸ்ரீபகவத்பாதாசார்யர்களின் அருள் வரலாற்றை இவ்வாறு துங்கா மடத்தினர் மட்டும் தங்கள் மனம்போனபடி மாற்றிக் கொண்டது ஏன் என்கிற விஷயத்தில் பொது விவாதம் நடத்த மாதவிய-மடாம்னாய கூட்டணி பண்டிதர்கள் முன் வருவார்களா?
