ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தரத்தரஶத நாமாவளியில் ब्रह्मराक्षसतोषकाय नम: ப்ரஹ்ம ராக்ஷஸ தோஷகாய நம: என்ற நாமாவின் பொருள் மற்றும் வரலாற்றுப் பின்னணி பலருக்கும் தெரிந்திராது. “ப்ரஹ்மராக்ஷஸை ஸந்தோஷப்படுத்தியவர்” என்பதே இதன் பொருள் ஆகும். ப்ராசீன ஶங்கர விஜயங்களில் உள்ளதாக அறியப்படும் இந்த வரலாறு பின்வருமாறு சொல்லப்படுகிறது:-
ஓர் அரசமரத்தில் ஒரு ப்ரஹ்மரக்ஷஸ் குடி கொண்டிருந்ததாயும், அம்மரத்தின் கீழ் ஸ்ரீஆசார்யாள் நிஷ்டையில் அமர்ந்திருந்ததாகவும், அப்பொழுது அது அவர்களின் அருகில் வந்து வணங்கி ‘நான் இந்த மரத்தடியில் வந்தவர்களை விழுங்குவது என்ற பழக்கம் உடையவன். ஆனால் உங்களை விழுங்க என்னால் இயலவில்லை; மிகவும் தேஜஸ்வியாகக் காணப்படும் தாங்கள், சில நாட்கள் இங்கேயே தங்கியிருந்து என்னை அனுக்ரஹித்து மகிழ்விக்க வேண்டும்’ என்று ப்ரார்த்தித்தது. அதற்கிணங்கிய ஸ்ரீஆசார்யாள், அவ்விதமே அங்கிருந்து அதை ஸந்தோஷப்படுத்தி, அதற்குச் ஶாப விமோசனமும் தந்து தமது விஜயத்தைத் தொடர்ந்தார்கள்.
இந்த வரலாற்று விளக்கம் “ஸ்ரீகுருதத்வ ரஹஸ்யம்” என்னும் நூலில் ஆங்கரை ப்ரஹ்மஸ்ரீ ரங்கஸ்வாமி ஶாஸ்த்ரிகளால் தரப்பட்டுள்ளது.
ஸ்ரீஶங்கேஶ்வரம்-கரவீரம் ஶங்கர மடத்தின் வரலாற்றுத் தொகுதிகளில் இந்த வரலாறு சற்று மாறுதலாகக் காண்கின்றது.
(தொடரும்)
