ஸ்ரீசங்கர விஜயம் – 8

பத்மபாதர் சீடரானமை பேராசிரியர் ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,
(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

ஆதி சங்கரரிடம் அதிபக்தி கொண்டவர்
வேதியர் ஸநந்தனர் எனுமொரு சிரேஷ்டர்
அவர்தம் மகிமையை அயலார் அறிய
நிகழ்ந்ததோர் சம்பவம் நிகழ்த்துவன் கேளீர்!
நீர்ப்பிர வாகம் நிறைந்த கங்கையின்
அக்கரை நின்ற அந்தணர் ஸநந்தரை அழைத்தார் சங்கரர் தம்மிடம் வரவே ;
தயக்கம் கொள்ளா ஸநந்தன ராற்றில்
இறங்கி நடந்தார்; இறைவன் அருளால்,
தாமரை யொன்றொன் றவர்பதந் தாங்கித்
தாண்டிவரச் செய்தது தவச்சி ரேஷ்டரை ;
அவர்குரு பக்தியை அகமகிழ்ந்து போற்றிப்
பத்மபா தர்எனப் பட்டம் சூட்டி
உத்தமச் சீடனாய் ஏற்றார் சங்கரர். (8/20)