மண்டனமிச்ர அக்ரஹாரம்

“அக்காலம் காஞ்சி தன்னில் அக்கிரகாரம் ஒன்றைத்

தக்காராம் சுரேசர் கட்டித் தானம் செய்தாரதற்கு

உரைத்ததால் மண்டன மிச்சிரரக்கிரகார மென்ன இக்

காலத்தினுமப்பேரே இசைப்பார்கள் எங்கும்மாதோ” -சங்கரவிஜயசிந்தாமணி

ஸ்ரீசுரேச்வராசார்யர் காஞ்சியில் ஒரு பெரும் அக்ரஹாரத்தை அமைத்தனர். ஸ்ரீகச்சபேச்வரர் கோயிலருகில் உள்ள இவ்வகரம் இவர்தம் பூர்வாச்ரமப் பெயரால் மண்டனமிச்ரர் அக்ரஹாரம் எனப்பட்டது.

ஸ்ரீசுரேச்வரர் காஞ்சியில் கலியாண்டு 2695 (பொ.யு.மு. 407)-ல் (பவ-ஜ்யேஷ்ட-சுக்லதுவாதசி) சித்தியுற்றனர். இன்றும் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஸ்ரீமடத்தில் ஸ்ரீசுரேச்வரர் சந்நிதியும் திருவுருவுமுள்ளன.

இவர்க்குப் பின் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தில் இவரால் போஷிக்கப்பட்ட சிறுவரான ஸ்ரீ சர்வக்ஞாத்மேந்திரர் ஸ்ரீபீடம் ஏறினர். -வித்வான் புலவர் வே.ம. அவர்கள்