கேள்வியும் பதிலும்
அவர் : “மாதவீய சங்கர விஜயத்தில் ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய ஸித்தி ஸ்தலம் கேதாரம்; அங்கிருந்துதான் அவர் கைலாஸம் அடைந்தார் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர் திரும்பி வந்ததாக எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதனால், கேதாரம்தான் ஸித்தி ஸ்தலம். மாதவீய சங்கர விஜயத்தில் இல்லாத எதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்”.
இவர்: “அப்படியானால் இதற்கு பதில் சொல்லுங்கள். தமது விரிவான திக்விஜய யாத்திரையின் நிறைவாகக் கேதாரம் சென்று அங்கிருந்தே கைலாஸம் அடைந்த ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் திரும்பி வரவேயில்லை என்று கதையை முடிக்கிறீர்கள்.
ஆனால், உங்களுடைய மாதவீயகாரர் சொல்லாதவை-
1. கைலாசத்தில் ஈசனாரின் அருளால் ஸௌந்தர்யலஹரிச் சுவடி அவருக்குக் கிடைத்தமை,
2. ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்படிக லிங்கங்களை அவர் பெற்றமை .
ஆனால், இந்த இரண்டு வரலாறுகளும் உங்களுடைய மடத்தில் பழமையாக வழங்கி வரும் ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தர சதநாம அர்ச்சனைக் கோவையில்
सौन्दर्यलहरीमुख्यबहुस्तोत्रविधायकाय नमः
कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः
என்பனவாகக் காண்கின்றதை யாவரும் அறிவார்கள்.
ஸ்ரீஸௌந்தர்யலஹரீ ஸ்தோத்ரம், ஸ்ரீசந்த்ரமௌலீச்வர லிங்கங்கள் ஆகியவற்றை ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்யர் பெற்றுக் கொண்டு, கைலாஸத்திலிருந்து திரும்பி வந்தனர் என்கிற மிக முக்கியமான சங்கர விஜய வரலாற்றுச் சம்பவங்களை, அன்றாடம் உங்களுடைய வழக்கத்தில் இருக்கும் பாரம்பர்ய அர்ச்சனைக் கோவை வாயிலாக ஏற்கனவே நீங்கள் ஏற்றிருப்பதால் ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகளுடைய ஸித்தி ஸ்தலம் கேதாரம் என்ற மாதவீய சங்கர விஜயக் கருத்தை நீங்களாகவே நிராகரித்து விட்டீர்கள். பின் எதற்கு இந்த கேதாரத்தில் ஸித்தி என்கிற நகைப்புக்குரிய வீண் வாதம்?”
மாதவீய சங்கர விஜயம் பலவற்றைச் சொல்ல விட்டிருக்கிறது.
श्रीचक्रात्मकताटङ्कतोषिताम्बामनोरथाय नमः
என்று மேற்சொன்ன அர்ச்சனைக் கோவையில் உள்ள வரலாற்றைக் காஞ்சி மடம் ஏற்கிறது. ஆனால், திருவானைக்காவில் தாடங்க ப்ரதிஷ்டை செய்த வரலாற்றை மாதவியகாரர் சொல்லவேயில்லை. அவரால் சொல்லப்படாத காஞ்சியில் ஸ்ரீகாமகோடி பீடம் ஸ்ரீமடம் ஸ்தாபனம், யோகலிங்க ப்ரதிஷ்டை, ஸர்வஜ்ஞ பீடாரோஹணம், அங்கேயே ஸித்தியுற்றது என்பனவற்றை ஏற்க மறுக்கும் நீங்கள் பிறகு ஏன் மாதவீயத்தில் இல்லாத ஜம்புகேஶ்வரம் தாடங்க ப்ரதிஷ்டை உரிமை கோரி இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அனாவசியமாக மெனக்கெட வேண்டும்?


