கேள்வி:
8ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவில் ஆழ்வார்கள், நாயன்மார்களின் வழிவந்த பக்தி இயக்கங்கள், மன்னர்கள் மற்றும் மக்கள் பங்களிப்புடன் முழுமையாக வளர்ந்திருந்ததை சரித்திரச் சான்றுகள் நமக்குக் காட்டுகின்றன. சங்கர விஜயங்களில் சொல்லப்பட்டுள்ள வரலாற்றுச் சம்பவங்கள், அவரது சமயப் பணிகள் ஆகியன.. ஒன்று கூட இந்த கால கட்டத்தில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. எனவே சங்கராவதாரம் பொ.யு 788ஆம் ஆண்டிலன்றி அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்புதானே நிகழ்ந்திருக்க வேண்டும்?